நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவகோட்டை: பாரதி தமிழ்ச் சங்க தமிழ்நாடு கலை இலக்கியப்பெருமன்றத்தின் சார்பில் மகாகவி பாரதி விழா ஆசிரியை தமிழ் மணி தலைமையில் நடந்தது.
சங்க தலைவர் பாலசுப்பிரமணியன் வரவேற்றார். செயலாளர் சவரிமுத்து அறிக்கை வாசித்தார். காஸ்மாஸ் லயன்ஸ் தலைவர் பாலமுருகன், தமிழ்த்துறை தலைவர் கண்ணதாசன், கவிஞர் நான்சி பேசினர்.
பபாசி தலைவர் சொக்கலிங்கம் தலைமையில் நடந்தது. மாணவர் கவியரங்கத்தை ஆசிரியர்கள் கலையரசன், செல்வம் தொகுத்தனர்.ஆசிரியர் எட்வின், வக்கீல் மணிபாரதி, பபாசி பொருளாளர் சுரேஷ் பேசினர். கிருங்கை சேதுபதி எழுதிய மகாகவி பாரதி வரலாறு நூலை டாக்டர் பெரியசாமி வெளியிட்டார்.
சங்க தலைவர் பெற்றுகொண்டார். நூலை பற்றி கிருங்கை சேதுபதி விளக்கி பேசினார். பபாசி தலைவர் சொக்கலிங்கம் போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.