/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பராமரிப்பு இல்லாத பள்ளி கழிப்பறை
/
பராமரிப்பு இல்லாத பள்ளி கழிப்பறை
ADDED : ஆக 21, 2025 11:19 PM
சிங்கம்புணரி: சிங்கம்புணரி அரசுப் பள்ளிகளில் பராமரிப்பு இல்லாத கழிப்பறைகளால் மாணவர்கள் அவதிப்படுகின்றனர்.
இத்தாலுகாவில் சிங்கம்புணரி, கிருங்காக்கோட்டை, அ.காளாப்பூர், செல்லியம்பட்டி, எஸ்.எஸ் கோட்டை, ஏரியூர், உலகம்பட்டி, எஸ்.புதுார், புழுதிபட்டி உள்ளிட்ட பகுதியில் அரசு மேல்நிலை, உயர்நிலைப் பள்ளிகள் உள்ளன. இவற்றில் பெரும்பாலான பள்ளிகளில் கழிப்பறைகள் முறையாக பராமரிக்கப்படாமல் சுகாதாரமற்ற நிலையில் உள்ளது. குறிப்பாக மாணவிகளின் கழிப்பறை பெயரளவுக்கு சுத்தம் செய்யப்படுகிறது.
இதனால் பல மாணவிகள் கழிப்பறை செல்வதையே தவிர்த்து விட்டு வீடுகளுக்கு செல்லும் நிலை உள்ளது.
குறிப்பாக சிங்கம்புணரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் முறையாக சுத்தம் செய்யப்படாமல் உள்ளது. பல பள்ளிகளில் துப்புரவு பணியாளர்கள் இல்லாததே கழிப்பறை பராமரிப்பு இல்லாமல் போவதற்கு முக்கிய காரணமாக உள்ளது.
அனைத்து பள்ளிகளிலும் கழிப்பறைகளை அதிகாரிகள் ஆய்வு செய்து முறையாக சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

