/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ஓட்டு எண்ணும் மையத்தில் பராமரிப்பு பணி: முன்னறிவிப்பின்றி 4 மணி நேரம் மின்தடை
/
ஓட்டு எண்ணும் மையத்தில் பராமரிப்பு பணி: முன்னறிவிப்பின்றி 4 மணி நேரம் மின்தடை
ஓட்டு எண்ணும் மையத்தில் பராமரிப்பு பணி: முன்னறிவிப்பின்றி 4 மணி நேரம் மின்தடை
ஓட்டு எண்ணும் மையத்தில் பராமரிப்பு பணி: முன்னறிவிப்பின்றி 4 மணி நேரம் மின்தடை
ADDED : ஜூன் 02, 2024 03:43 AM
சிவகங்கை லோக்சபா தொகுதியில் காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, திருப்புத்துார், ஆலங்குடி, திருமயம் ஆகிய 6 சட்டசபை தொகுதிகள் உள்ளன. ஆறு தொகுதிகளுக்கு உட்பட்ட ஆயிரத்து 873 ஓட்டுச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு முடிந்த நிலையில் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள்
அழகப்பா இன்ஜி., கல்லுாரி மற்றும் அழகப்பா பாலிடெக்னிக்கல்லுாரியில் உள்ளஅறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு பணியில் துணை ராணுவம் போலீஸ் என 300-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், 224 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மாவட்ட மின்வாரிய அதிகாரிகளின் மேற்பார்வையில், ஓட்டு எண்ணும் மையத்தில், தடையில்லா மின்சாரம் வழங்கிட துரித பணிகள் நடந்தது. நாளை மறுநாள் ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது.
இந்நிலையில், நேற்று மீண்டும் ஓட்டு எண்ணும்மையத்தில் 5 மணி நேரத்திற்கும் மேலாக மின் பராமரிப்பு பணி நடந்தது. முன்னறிவிப்பின்றி திடீரென்று நடந்த பணியால் காரைக்குடி பகுதியில் 4 மணி நேரத்திற்கும் மேலாக மின்தடை நீடித்தது. இதனால் வியாபாரிகள், பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவிகள் சிரமம் அடைந்தனர்.
மின்நிலைய அதிகாரிகள் கூறும்போது, ஒரு நாள் மின்தடை மட்டுமே முன்னறிவிப்பு செய்ய முடியும். ஓட்டு எண்ணும் மையத்தில், அதிக மின்னழுத்தம் காரணமாக மின்தடை ஏற்படும் நிலை இருந்தது. இதனால், திடீர் மின் பராமரிப்பு பணி நடந்தது. பராமரிப்பு காரணமாக காரைக்குடியில் மின்தடை ஏற்பட்டது.