/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ரூ.72.5 லட்சத்தில் விடுதிகளில் பராமரிப்பு பணி
/
ரூ.72.5 லட்சத்தில் விடுதிகளில் பராமரிப்பு பணி
ADDED : பிப் 01, 2024 11:44 PM
சிவகங்கை: பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் நல விடுதிகளில் 2023 =-24 ம் ஆண்டிற்கு ரூ.72.05 லட்சம் மதிப்பீட்டில் சிறப்பு பழுது மற்றும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.
பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறையின் கீழ் சொந்தக் கட்டடங்களில் இயங்கிவரும் அரசு பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினர், சீர் மரபினர் ஆகிய மாணவர்களுக்கான நலவிடுதிகளுக்கு முன்னுரிமை பட்டியலின் அடிப்படையில் விடுதி பழுது மற்றும் பராமரிப்பு பணிகளுக்கென ஒவ்வொரு ஆண்டும் அரசால் நிதிஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் பொதுப் பணித்துறை மூலம் மேற் கொள்ளப்பட்டு வருகிறது.
சிவகங்கை மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப்பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் கீழ் சொந்தக் கட்டடங்களில் இயங்கி வரும் விடுதிகளில் 2023 - -24ம் ஆண்டிற்கான சிறப்புபழுது மற்றும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள ரூ.72.05 லட்சம் அரசால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து, அரசு பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினர் நல பள்ளி மாணவியர் விடுதி சிவகங்கை, அரசு பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினர் நல பள்ளி மாணவியர் விடுதி கல்லல், அரசு பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினர் நல பள்ளி மாணவியர் விடுதி தேவகோட்டை, அரசு மிகவும் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினர் நலபள்ளி மாணவர் விடுதி குன்றக்குடி, அரசு மிகவும் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினர் நலபள்ளி மாணவர் விடுதி ஆ.தெக்கூர் ஆகிய விடுதிகளில் தண்ணீர் வசதி, மின்சார உபகரண பராமரிப்பு பணி, கதவு ஜன்னல்கள் சீரமைத்தல், சமையலறை பழுதுகள், விடுதி கட்டடங்களுக்கு வெள்ளையடித்தல், வர்ணம் பூசுதல் மற்றும் இதர பழுதுகள் பொதுப்பணித்துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.

