/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பயிரில் பூச்சியை அழிக்க உதவும் மக்காச்சோளம் விதைசான்று உதவி இயக்குனர் தகவல்
/
பயிரில் பூச்சியை அழிக்க உதவும் மக்காச்சோளம் விதைசான்று உதவி இயக்குனர் தகவல்
பயிரில் பூச்சியை அழிக்க உதவும் மக்காச்சோளம் விதைசான்று உதவி இயக்குனர் தகவல்
பயிரில் பூச்சியை அழிக்க உதவும் மக்காச்சோளம் விதைசான்று உதவி இயக்குனர் தகவல்
ADDED : ஜூலை 20, 2025 11:07 PM
சிவகங்கை: மக்காச்சோளம் நடவு செய்தால், பயிர்களை தாக்கும் பூச்சிகளை எளிதில் அழிக்கலாம் என சிவகங்கை விதை சான்று அளிப்பு உதவி இயக்குனர் சக்திகணேஷ் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது, இயற்கை வழி பயிர் சாகுபடியில் பூச்சி மற்றும் நோய் மேலாண்மை ஒரு சவாலாக உள்ளது. இருப்பினும் ரசாயன பூச்சிக்கொல்லி அல்லாத ஒருங்கிணைந்த பாதுகாப்பு முறைகளை துவக்கத்தில் இருந்தே முறையாக கடைபிடிப்பதால் பூச்சி, நோய்களை வெகுவாக இயற்கை முறையில் கட்டுப்படுத்தலாம்.
இதற்கு ஆமணக்கு செடிகளை வயலின் ஓரத்தில் எண்ணிக்கை குறைவாக நட வேண்டும். இவற்றில் தான் முதலில் பூச்சி தாக்கும். எனவே அடிக்கடி ஆமணக்கு செடியில் உள்ள பூச்சிகளை கண்டறிந்து அழிக்க வேண்டும். தட்டை பயறு செடியை வரப்பு ஓரத்தில் அல்லது ஊடுபயிராக நடலாம். இதில் அசுவினி பூச்சி வளர ஏற்ற செடி. இந்த அசுவினி பூச்சியை சாப்பிட பொறி வண்டு, நன்மை தரும் பூச்சிகள் வந்துவிடும்.
மக்காச்சோளத்தை வரப்பு சுற்றியோ அல்லது ஊடுபயிராகவோ நட்டால், இங்கு இறைவிழுங்கின் உற்பத்தி செய்து பயிரை தாக்கும் பூச்சிகளை அழிக்கும். மேலும் பறவைகள் உட்கார்ந்து பூச்சிகளையும் சாப்பிட்டு விடும். மஞ்சள் பட்டாம்பூச்சி செண்டு மல்லி வேர்களில் இருந்து சுரக்கும் திரவங்கள் நுாற்புழுக்களை கொல்லும். இந்த திரவங்கள் ஒரு சதுர மீட்டர் பரப்பளவிற்கு செல்லக்கூடியவை. எனவே பயிர்களுக்கு அருகிலேயே செண்டு மல்லி நடலாம்.
அதே போன்று வேப்ப எண்ணெய் இயற்கை முறை பூச்சி மருந்தாகும். நோய்களை கட்டுப்படுத்தக்கூடியதாக உள்ளது. இயற்கை வேளாண்மையில் சாகுபடி செய்யும் போதுஆரம்பகால மகசூல் குறைய வாய்ப்புள்ளது.
இயற்கை முறையில் சாகுபடி செய்வதால் மண் வளம் பாதுகாக்கப்பட்டு, மகசூல் அதிகரிக்க வாய்ப்புள்ளது. மேலும் உற்பத்தி செலவு குறைந்து நிகர லாபம் அதிகரிப்பதோடு, சுற்றுப்புற சூழலும் மாசுபடாது, என்றார்.

