/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
களி மண்ணால் கலைப்பொருட்கள் தயாரிப்பு
/
களி மண்ணால் கலைப்பொருட்கள் தயாரிப்பு
ADDED : டிச 14, 2025 06:21 AM

மானாமதுரை: மானாமதுரையில் தத்ரூபமாக மண்ணிலேயே மாலைகள், ஆரத்தி தட்டு உள்ளிட்ட பல்வேறு வகை கைவினை பொருட்களை தயாரித்து பெண்கள் அசத்தியுள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் மத்திய அரசின் ஜவுளி துறை கைவினைப் பொருட்கள் வளர்ச்சி மற்றும் தமிழக அரசின் பூம்புகார் நிறுவனம் சார்பில் 30க்கும் மேற்பட்ட பெண்களுக்கு மானாமதுரை மண்பாண்ட தொழிற்கூடத்தில் களி மண்ணாலான கைவினைப் பொருட்களை தயாரிப்பதற்கான பயிற்சி அளிக்கப்பட்டது.
முதுநிலை மண்பாண்ட பொருட்கள் பயிற்சியாளர் ராஜகோபால் பெண் களுக்கு பயிற்சி அளித்தார்.
பயிற்சி பெற்ற பெண்கள் களிமண்ணில் மாலைகள்,அலங்கார வளைவு, சாம்பிராணி விளக்குகள் மற்றும் ஆரத்தி தட்டு என பல பொருட்களை கலைநயமாக தயாரித்து அதற்கு தகுந்த வர்ணங்களை தீட்டினர்.
பயிற்சியாளர் ராஜகோபால் கூறியதாவது: மண்பாண்ட பொருட்களுக்கு பெயர் பெற்ற மானாமதுரையில் பயிற்சி பெற்ற ஏராளமான பெண்கள் இதுவரை யாருமே தயார் செய்யாத மாலையை மண்ணில் மிகவும் கலைநயத்தோடு தத்ரூபமாக தயார் செய்துள்ளனர்.
இவை தமிழக அரசின் பூம்புகார் நிறுவனத்தில் மொத்தமாக விற்பனைக்கு வைக்கப்பட உள்ளது. இந்த பயிற்சி மூலம் பெண்கள் வருமானமும் ஈட்டி வருகின்றனர் என்றார்.

