/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
முறையூர் அரசு பள்ளி நுாற்றாண்டு விழா
/
முறையூர் அரசு பள்ளி நுாற்றாண்டு விழா
ADDED : மார் 16, 2025 12:39 AM
சிங்கம்புணரி; சிங்கம்புணரி அருகே முறையூர் அரசு தொடக்கப்பள்ளியின் நுாற்றாண்டு விழா நடந்தது.
முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் பொன்.குணசேகரன் தலைமை வகித்தார். முன்னாள் ஊராட்சி தலைவர் என்.எம்.சுரேஷ், சத்தியமூர்த்தி, கோயில் கண்காணிப்பாளர் மாணிக்கம் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் கலா வரவேற்றார்.
அறந்தாங்கி நிஷா பேசினார். மாநில அளவிலான மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது. போட்டியை தமிழ்நாடு உடற்கல்வி விளையாட்டு பல்கலை முன்னாள் துணைவேந்தர் சுந்தர், டாக்டர்கள் குமரேசன், அருள்மணி நாகராஜன் துவக்கி வைத்தனர். விழாவில் வட்டாரக் கல்வி அலுவலர் கலைச்செல்வி, தேசிய நல்லாசிரியர் சக்திவேல், சொக்கநாதன், விஸ்வநாதன், கோபாலன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.