/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
போலீசை கட்டையால் அடித்தவர் கைது
/
போலீசை கட்டையால் அடித்தவர் கைது
ADDED : டிச 31, 2025 04:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: சிவகங்கை தாலுகா எஸ்.ஐ., சக்திவேல் இரண்டாம் நிலை காவலர் சூர்யகுமார் உள்ளிட்ட போலீசார் நாட்டரசன்கோட்டையில்
குற்றப்பதிவேடு குற்றவாளியான ஆலடியார் தெரு கணேசன் மகன் ஈஸ்வரனை 38 கண்காணிக்க சென்றனர். அப்போது ஈஸ்வரன் எஸ்.ஐ., மற்றும் உடன் இருந்த போலீசாரை அசிங்கமாக பேசி கையில் வைத்திருந்த கட்டையால் சூர்யகுமாரை தோள்பட்டையில் அடித்து கொலை மிரட்டல் விடுத்தார். அவரை எஸ்.ஐ., உள்ளிட்ட போலீசார் பிடித்தனர். காயமடைந்த சூர்யகுமாரை மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஈஸ்வரனை இன்ஸ்பெக்டர் சிவசுப்பிரமணியன் கைது செய்தார்.

