/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
வேலை வாங்கித்தருவதாக ரூ.2.76 லட்சம் மோசடி
/
வேலை வாங்கித்தருவதாக ரூ.2.76 லட்சம் மோசடி
ADDED : டிச 30, 2025 06:32 AM
சிவகங்கை: சிவகங்கை வாலிபரிடம் டெலிகிராம் ஆப் மூலம் பேசி தனியார் கம்பெனியில் பகுதி நேர வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.2.76 லட்சம் மோசடி செய்தவரை சைபர் கிரைம் போலீசார் தேடி வருகின்றனர்.
சிவகங்கை வாணியங்குடியைச் சேர்ந்தவர் அமர்நாத் 35. இவர் ஆன்லைனில் பகுதி நேர வேலை தேடினார்.
இவரது அலைபேசிக்கு டெலிகிராம் ஆப் மூலம் பகுதி நேர வேலை தருவதாக ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில் உள்ள எண்ணில் அமர்நாத் தொடர்பு கொண்டார்.
அதில் பேசியவர் கூறியதை நம்பி வங்கி கணக்கிற்கு ரூ.2 லட்சத்து 76 ஆயிரத்து 29 மாற்றினார். அந்த பணத்தை பெற்ற அந்த நபர் பகுதி நேர வேலை பெற்றுத்தரவில்லை.
பிறகு தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அமர்நாத் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.
கல்வி உதவித்தொகை மோசடி காரைக்குடி அருகே கண்ணங்குடி பகுதியைச் சேர்ந்த 50 வயது பெண்ணின் அலைபேசிக்கு பிப்., 24 ல் ஒருவர் பேசி மகள் படிக்க கல்வி உதவித்தொகை தருவதாக கூறினார். அதை நம்பி அப்பெண் அவர் கூறிய வங்கி கணக்கிற்கு ரூ.38 ஆயித்து 500 அனுப்பினார்.
பெண்ணின் பக்கத்து வீட்டில் உள்ள நபர்களிடம் அதேபோல் பேசி ரூ.14 ஆயிரம் பெற்றுள்ளனர். பிறகு ஏமாற்றப்பட்டதை உணர்ந்து அப்பெண் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். மோசடி நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

