/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு போக்சோவில் ஒருவர் கைது
/
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு போக்சோவில் ஒருவர் கைது
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு போக்சோவில் ஒருவர் கைது
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு போக்சோவில் ஒருவர் கைது
ADDED : அக் 16, 2025 07:38 PM
சிவகங்கை:சிவகங்கை மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 8 வயது சிறுமி. சிறுமியின் தந்தை அந்தமானில் பணிபுரிகிறார். தாயுடன் வசித்து வரும் சிறுமி அரசு பள்ளியில் 4ஆம் வகுப்பு படித்து வருகிறார். சிறுமி வீட்டில் துாங்கும் போது சத்தம் போட்டு என்னை விட்டு விடுங்கள் என்று உளறியுள்ளார். சிறுமியின் தாய் சிறுமியிடம் விசாரித்தார்.
கடந்த 10ஆம் தேதி பள்ளி முடிந்து சிறுமி மாலை 5:30 மணிக்கு வீட்டிற்கு திரும்பிய போது ஜெய்னுதீன் 54 என்பவர் சிறுமியை தான் வீட்டில் விட்டு விடுவதாக கூறி டூவீலரில் அழைத்து சென்று தொந்தரவு செய்ததாகவும், இது குறித்து யாரிடமாவது தெரிவித்தால் உன்னை கொன்று விடுவேன் என்று மிரட்டியதாகவும் சிறுமி கூறியுள்ளார். சிறுமியின் தாயார் நேற்று முன்தினம் சிவகங்கை அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் போக்சோ பிரிவில் ஜெய்னுதீனை கைது செய்தனர்.

