/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ரூ.பல கோடி திமிங்கலத்தின் எச்சம் கடத்தியவர் கைது
/
ரூ.பல கோடி திமிங்கலத்தின் எச்சம் கடத்தியவர் கைது
ADDED : ஜன 11, 2025 01:51 AM

மானாமதுரை:சிவகங்கை மாவட்டம் மானாமதுரை புது பஸ் ஸ்டாண்ட்டில் ரூ.பல கோடி மதிப்பிலான திமிங்கல எச்சத்தை கடத்தியவரை வனத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
மானாமதுரை புது பஸ் ஸ்டாண்ட்டில் ஜன., 2 ல் திமிங்கலத்தின் எச்சம் கடத்தப்படுவதாக வனத்துறையினருக்கு தகவல் சென்றது. மாவட்ட வன அலுவலர் பிரபா மற்றும் அதிகாரிகள் அன்றிரவு 8:15 மணிக்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட போது ராமநாதபுரம் மாவட்டம் கமுதி தாலுகா வள்ளந்தை மேலத்தெருவைச் சேர்ந்த ராமநாதன் மகன் ராஜாராம் 55, என்பவரை பிடித்து சோதனையிட்டனர். அவரிடம் 4.695 கிலோ திமிங்கலத்தின் எச்சம் இருந்தது தெரிந்தது. அதை கைப்பற்றி அவரை கைது செய்து மானாமதுரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிவகங்கை கிளைச்சிறையில் அடைத்தனர்.
வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
திமிங்கலத்தின் எச்சம் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து ராஜாராம் கைது செய்யப்பட்டார். அதன் மதிப்பு ரூ.பல கோடி. அது எங்கிருந்து கடத்தி, எங்கு கொண்டு செல்லப்பட்டது என்பது குறித்தும், இக்கடத்தலில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடக்கிறது என்றனர்.

