ADDED : அக் 10, 2024 09:06 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி:சிவகங்கை மாவட்டம் காரைக்குடி டி.டி.நகர் கற்பக விநாயகர் கோவிலில் 45 நாட்களுக்கு முன் கும்பாபிஷேகம் நடந்தது.
நேற்று காலை கோவிலை திறந்தபோது அதன் கோபுரத்தில் இருந்த ஏழு கலசங்கள் திருடு போயிருந்தது தெரிந்தது.
இதுகுறித்து விசாரித்த போலீசார், கல்லல் அருகே உள்ள கல்லுப்பட்டியைச் சேர்ந்த கண்ணப்பன் மகன் முருகேசன், 45, என்பதும், கோவில் கலசங்களை திருடி மறைத்து வைத்திருந்ததும் தெரிய வந்தது.
அவரை கைது செய்து, கலசங்களை போலீசார் மீட்டனர். அவரிடமிருந்த சிலைகள் தொடர்பாக தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.