/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிமென்ட் தொட்டியை தலையில் போட்டு ஒருவர் கொலை
/
சிமென்ட் தொட்டியை தலையில் போட்டு ஒருவர் கொலை
ADDED : ஜன 15, 2025 12:28 AM
சிவகங்கை; காளையார்கோவில் அருகே சிமென்ட் தொட்டியை தலையில் போட்டு மோகன் 38, என்பவரை கொலை செய்த தாசை 45, போலீசார் கைதுசெய்தனர்.
சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் வாள்மேல் நடந்த அம்மன் கோயில் தெரு கருணாநிதி மகன் மோகன் 38. பரமக்குடி ஆத்துப்பாலம் தொண்டிமுத்து மகன் தாஸ் 45. இவர்கள் இருவரும், மறவமங்கலத்தில் உள்ள ஐயப்பன் என்பவருக்கு சொந்தமான ஹாலோ பிளாக் கம்பெனியில் 4 ஆண்டாக பணிபுரியாற்றினர். மோகன் அடிக்கடி விடுப்பில் சென்றுவிடுவார். பணிகள் பாதிப்பதாக கூறி, தாஸ் அடிக்கடி வெளியாட்களை வேலைக்கு அழைத்து வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 11:00 மணிக்கு இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமுற்ற தாஸ் சிமென்ட் தொட்டியை மோகனின் தலையில் போட்டு கொலை செய்தார். தாசை காளையார்கோவில் இன்ஸ்பெக்டர் முத்துப்பாண்டி கைது செய்தார்.