/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மானாமதுரை சித்திரை திருவிழா சமணர்கள் கழுவேற்றும் நிகழ்ச்சி
/
மானாமதுரை சித்திரை திருவிழா சமணர்கள் கழுவேற்றும் நிகழ்ச்சி
மானாமதுரை சித்திரை திருவிழா சமணர்கள் கழுவேற்றும் நிகழ்ச்சி
மானாமதுரை சித்திரை திருவிழா சமணர்கள் கழுவேற்றும் நிகழ்ச்சி
ADDED : மே 08, 2025 03:23 AM

மானாமதுரை: மானாமதுரை ஆனந்தவல்லி, சோமநாதர் கோயில் சித்திரை திருவிழாவில் நேற்று முன்தினம் இரவு சமணர்கள் கழுவேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.இன்று காலை திருக்கல்யாணம் நடைபெற உள்ளது.
சிவகங்கை சமஸ்தான தேவஸ்தான நிர்வாகத்துக்குட்பட்ட மானாமதுரை ஆனந்தவல்லி சோமநாதர் கோயிலில் திருவிழா கடந்த 1ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினந்தோறும் சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதிவுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். நேற்று முன்தினம் இரவு கீழமேல்குடி கிராமத்தார்கள் மண்டகப்படிக்கு ரிஷப வாகனத்தில் எழுந்தருளிய சுவாமிகள் தனித்தனி சப்பரங்களில் வீதி உலா வந்து பொட்டலில் சமணர்கள் கழுவேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஆனந்தவல்லி அம்மன், சோமநாதர் திருக்கல்யாணம் இன்று காலை 9:00 மணியிலிருந்து 10:00 மணிக்குள் நடைபெற உள்ளது. நாளை காலை 9:30 மணிக்கு தேரோட்டம் நடைபெற உள்ளது.