/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மானாமதுரை மண் பானைகள் தயாரிப்பு பணி மும்முரம்
/
மானாமதுரை மண் பானைகள் தயாரிப்பு பணி மும்முரம்
ADDED : டிச 29, 2025 06:50 AM

மானாமதுரை: மானாமதுரையில், பொங்கல் பண்டிகைக்காக கலை நயமிக்க பானைகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
மானாமதுரையில் 300 பேர் மண்பாண்ட தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இங்கு மண்பானைகள் மட்டுமின்றி, விளக்குகள், சமையல் பொருட்கள் என பல்வேறுவிதமான பொருட்களை மண்ணில் தயாரித்து விற்பனைக்கு அனுப்பி வருகின்றனர்.
தை பொங்கலுக்கு இன்னும் 18 நாட்களே உள்ள நிலையில் வீடுகளில் பொங்கல் வைக்க தேவையான மண் பானைகளை தயாரித்து விற்பனைக்கு தயார் நிலையில் வைத்து வருகின்றனர்.
இங்கு சிறிய சைஸ் முதல் பெரிய சைஸ் வரை மண் பானைகள் தயாரித்து விற்கின்றனர்.
இதுகுறித்து மண்பாண்ட தொழிலாளர்கள் கூறியதாவது, கலைநயத்துடன் பொங்கல் பானை தயாரிப்பதால், தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் பொங்கலுக்கான மண்பானை விற்பனைக்கு செல்கிறது.
மானாமதுரை பொங்கல் பானைக்கு மவுசு அதிகம் என்றனர்.

