ADDED : டிச 29, 2025 06:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவகோட்டை: தேவகோட்டையில் வ.உ.சி., பேரவை வட்ட ஆண்டு, அவரது 154 வது விழா நடந்தது. தலைவர் தில்லைராஜா தலைமை வகித்தார். நிர்வாகிகள் ஜானகிராமன், ராமு, ரவி, தமிழ் அரிமா, முத்துலட்சுமி முன்னிலை வகித்தனர். செயலாளர் ராஜ் வரவேற்றார். அமைப்பு செயலாளர் வெங்கடாசலம் அறிக்கை வாசித்தார்.
பொருளாளர் செந்தில்நாதன் நிதி நிலை அறிக்கை வாசித்தார். சிவபிரகாச சத்திய ஞான தேசிகர், சைவ வேளாளர் சங்க நிர்வாகிகள் லட்சுமணன், ராமசந்திரன், டாக்டர் செந்தமிழ்செல்வன், வ.உ.சி.,யின் பேத்தி செல்வி, புரவலர் முருகேசன், முகமது கைப், நவீன், பாலாசித்தர், வி.ஏ.ஓ., சங்க நிறுவனர் போஸ், ஆசிரியர் சுப்பிரமணியன், பேரவை நிர்வாகிகள் செல்வராஜ், அழகய்யா, வேலாயுதம், மணிகண்டன் பங்கேற்றனர். அண்ணாத்துரை நன்றி கூறினார்.

