ADDED : டிச 29, 2025 06:43 AM
சிவகங்கை: சிவகங்கை மாவட்ட விளையாட்டு திடலில் உள்ள நீச்சல் குளத்தில் மாவட்ட அளவிலான நீச்சல் போட்டிகள் நடந்தது.
மாவட்ட நீச்சல் கழக தலைவர் ஜெயதாஸ் துவக்கி வைத்தார். செயலாளர் ஜெயமுருகன் முன்னிலை வகித்தார். நீச்சல் பயிற்சியாளர் பால்பாண்டிதுரை போட்டிகளை நடத்தினார். துணை செயலாளர்கள் கண்ணப்பன், ராஜா, முருகன், சுரேஷ் ஆகியோர் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினர். சங்க பொருளாளர் ஞானசேகரன் நன்றி கூறினார்.
ஆண்கள் பிரிவில் முதலிடம் 100மீ., ப்ரீ ஸ்டைலில் லவன், 100மீ., பேக் ஸ்டைலில் கவினேஷ், 100 மீ., பட்டர் பிளையில் ஜெயசன், ப்ரஸ்ட் ஸ்ட்ரோக்கில் கவியரசு, 100 மீ., ஐ., எம்., பிரிவில் ரகுநாத், 200 மீ., ஐ.எம்., பிரிவில் ஹரீஸ், 50 மீ., ப்ரீ ஸ்டைலில் அழகுராஜா, பேக் ஸ்ட்ரோக் பிரிவில் சரண், பிரஸ்ட் ஸ்ட்ரோக் பிரிவில் வருண், பட்டர் பிளே கிருத்திக் சாய், 25 மீ., பிரஸ்ட் ஸ்ட்ரோக் சிவசூர்யா, பேக் ஸ்ட்ரோக் சமயசிவமித்ரன், பிரீ ஸ்டைல் சபரிராஜ், பட்டர் பிளே விஸ்வநாதன் ஆகியோர் பெற்றனர்.
பெண்கள் பிரிவில் முதலிடம் 50மீ., ப்ரீ ஸ்டைலில் சுருதிஹாசினி, பேக் ஸ்டைலில் சுருதிகா, பிரஸ்ட் ஸ்ட்ரோக்கில் அக்சரா, பட்டர் பிளையில் சிவதர்ஷினி, 25 மீ., பட்டர் பிளேயில் ஜனுஷா, பேக் ஸ்ட்ரோக்கில் சிவஹரிணி, ப்ரீ ஸ்டைலில் ஹனிஷா ஆகியோர் பெற்றனர்.

