/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மானாமதுரை நான்கு வழிச்சாலை சென்டர் மீடியனில் செடிகளால் விபத்து
/
மானாமதுரை நான்கு வழிச்சாலை சென்டர் மீடியனில் செடிகளால் விபத்து
மானாமதுரை நான்கு வழிச்சாலை சென்டர் மீடியனில் செடிகளால் விபத்து
மானாமதுரை நான்கு வழிச்சாலை சென்டர் மீடியனில் செடிகளால் விபத்து
ADDED : மார் 05, 2024 05:46 AM

மானாமதுரை : மானாமதுரை,ராமேஸ்வரம் 4 வழிச்சாலையில் மானாமதுரை அருகே சென்டர் மீடியனில் வளர்ந்துள்ள கருவேல மரங்களால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
தமிழகத்தில் கருவேல மரங்களை அகற்ற தமிழக அரசு இதுவரை நடவடிக்கை எடுக்காததற்கு மதுரை ஐகோர்ட் கிளை கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் மதுரை, ராமேஸ்வரம் இடையே உள்ள 4 வழிச்சாலையில் தினந்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. மேலப்பசலை மேம்பாலம் அருகே சென்டர்மீடியனில் அதிகளவில் கருவேல மரங்கள் வளர்ந்துள்ளதால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இதனை அகற்றக் கோரி பலமுறை 4வழிச்சாலை நிர்வாகத்திடம் மக்கள் பலமுறை தெரிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.மதுரை, ராமேஸ்வரம் 4 வழிச்சாலை நடுவே வளர்ந்துள்ள கருவேல மரங்களை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.