/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மானாமதுரை, இளையான்குடியில் நிரம்பிய கண்மாய்: கரைகள் பாதுகாப்பு இல்லாததால் உடையும்
/
மானாமதுரை, இளையான்குடியில் நிரம்பிய கண்மாய்: கரைகள் பாதுகாப்பு இல்லாததால் உடையும்
மானாமதுரை, இளையான்குடியில் நிரம்பிய கண்மாய்: கரைகள் பாதுகாப்பு இல்லாததால் உடையும்
மானாமதுரை, இளையான்குடியில் நிரம்பிய கண்மாய்: கரைகள் பாதுகாப்பு இல்லாததால் உடையும்
ADDED : டிச 24, 2024 04:41 AM
மானாமதுரையில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் வைகை மூலம் பாசனம் பெறும் 22 கண்மாய்கள், மானாவாரி பாசனமாக 50 கண்மாய்கள், ஊராட்சி ஒன்றிய கட்டுப்பாட்டில் 100க்கும் மேற்பட்ட கண்மாய்கள் உள்ளன.
இதே போன்று இளையான்குடியில் வைகை ஆற்றுப் பாசனம் மூலம் 42 கண்மாய்,மானாவாரி பாசனமாக 42 கண்மாய், ஊராட்சி ஒன்றியத்தின் கட்டுப்பாட்டின் கீழ் 120க்கும் மேற்பட்ட கண்மாய்கள் உள்ளன.
கடந்த சில மாதங்களாக பெய்த பருவ மழை காரணமாக வைகை ஆற்றில் தண்ணீர் செல்வதால் பெரும்பாலான கண்மாய் நிரம்பி மறுகால் பாய்கின்றன. மேலும் ஒரு சில ஊர்களில் கண்மாய்கள் உடையும் அபாயத்தில் உள்ளது.
மானாமதுரை அருகே சி. கரிசல்குளத்தில் ஊராட்சி ஒன்றிய கட்டுப்பாட்டில் உள்ள கண்மாய் மடை சேதமடைந்து நீண்ட வருடங்களானதால் தற்போது கண்மாய் நிரம்பி உடையும் அபாயம் ஏற்பட்டதால் கிராம மக்கள்மணல் மூடைகளை கொண்டு அடைத்தனர்.
காக்குடி கண்மாய் நிரம்பி ரோட்டில் தண்ணீர் செல்வதால் அப்பகுதி மக்கள் ஆபத்தான முறையில் தண்ணீரை கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதே போன்று அரிமண்டபம் கிராமத்தில் கண்மாய் நிரம்பி அன்னவாசல் புதுார் கிராமத்தை தண்ணீர் சூழ்ந்ததால் அப்பகுதி மக்கள் அவதிக்குள்ளாகினர்.
இதுபோன்று பல்வேறு இடங்களிலும் தண்ணீர் வெளியேறி வருவதால் கிராம மக்கள் சிரமப்படுகின்றனர். தற்போதும் கிராம பகுதிகளில் பெரும்பாலான நீர் நிலைகள் நிரம்பிய நிலையில் மக்கள் குளிப்பதற்கும், மீன்களை பிடிக்க சென்று உயிரிழப்புகளையும் சந்தித்து வருகின்றனர்.
பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று மானாமதுரை, இளையான்குடி மக்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.
பொதுப்பணித்துறை, ஊரகவளர்ச்சி துறை அதிகாரிகள் கூறியதாவது:
மானாமதுரை, இளையான்குடி பகுதிகளில் நிரம்பி வழியும் கண்மாய்களை கண்காணித்து வருகிறோம்.மேலும் கண்மாய் உடையும் பட்சத்தில்அதனை உடனடியாக அடைப்பதற்காக சவுக்கு கம்பு, மணல் மூடைகள், ஊழியர்களை தயார் நிலையில் வைத்துள்ளோம்.
கண்மாய்களில் இறங்கி குளிக்கவோ, விளையாடவோ, தகுந்த பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் மீன் பிடிக்கவோ கூடாது என்று வருவாய்த்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்தந்த பகுதி வி.ஏ.ஓ.,க்கள் தினமும் கண்மாய்களின் நிலை குறித்து கண்காணித்து வருவதாக கூறினர்.