/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மானாமதுரை நிலமெடுப்பு அலுவலகம் மாற்றம்: வாடகை பாக்கியால் கோப்புகளை எடுக்க முடியாமல்
/
மானாமதுரை நிலமெடுப்பு அலுவலகம் மாற்றம்: வாடகை பாக்கியால் கோப்புகளை எடுக்க முடியாமல்
மானாமதுரை நிலமெடுப்பு அலுவலகம் மாற்றம்: வாடகை பாக்கியால் கோப்புகளை எடுக்க முடியாமல்
மானாமதுரை நிலமெடுப்பு அலுவலகம் மாற்றம்: வாடகை பாக்கியால் கோப்புகளை எடுக்க முடியாமல்
ADDED : டிச 17, 2024 03:56 AM
மதுரையில் இருந்து பரமக்குடி வரை நான்கு வழிச்சாலையாகவும்,பரமக்குடியில் இருந்து ராமேஸ்வரம் வரை இருவழிச் சாலையாகவும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு மாற்றப்பட்டு போக்குவரத்து நடைபெற்று வருகிறது.
மதுரை அருகே உள்ள விரகனுாரில் இருந்து மானாமதுரை அருகே உள்ள எம். கரிசல்குளம் வரை 30 க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நில உரிமையாளர்களிடம் நிலம் கையகப்படுத்தப்பட்டு அதற்கான இழப்பீடு வழங்கும் தேசிய நெடுஞ்சாலை 49 நிலமெடுப்பு அலுவலகம் மானாமதுரை மரக்கடை பஸ் ஸ்டாப் அருகே தனியார் கட்டடத்தில் 14 வருடங்களாக இயங்கி வந்தது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிர்வாக காரணங்களுக்காக இந்த அலுவலகம் சிவகங்கைக்கு மாற்றப்பட்ட நிலையில் இந்த அலுவலகத்தில் பணியாற்றிய ஊழியர்களுக்கு கடந்த ஏழு மாதமாக சம்பளம் வழங்கப்படாமலும், அலுவலக தனி தாசில்தார் பயன்படுத்திய வாடகை காருக்கு பணம் வழங்கப்படாமலும், அதே போன்று கட்டட உரிமையாளருக்கு 10 மாதங்களாக வாடகை பாக்கியும் உள்ளது.
அலுவலகம் செயல்பட்டு வந்த கட்டடத்திற்கு வாடகை வழங்காததால் அங்குள்ள கோப்பு மற்றும் தளவாட சாமான்கள் ஆகியவற்றை சிவகங்கைக்கு கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அலுவலர்கள் சிவகங்கையிலும், கோப்புகள் மானாமதுரையிலும் இருப்பதால் பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
ஊழியர்கள் சிலர் கூறியதாவது:
இந்த அலுவலகத்தில் தனி தாசில்தார், வருவாய் ஆய்வாளர் பணியாற்றி வரும் நிலையில் தொகுப்பூதியத்தில் கணினி இயக்குனர், புல உதவியாளர் மற்றும் அலுவலக உதவியாளர் என 5 பேர் பணி செய்து வருகிறோம். கடந்த 7 மாதமாக சம்பளம் வழங்கப்படவில்லை.அலுவலகமும் மாற்றப்பட்டதால் சம்பளம் வருமோ என்ற நிலையில் குடும்பத்தை காப்பாற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மாவட்ட நிர்வாகம் இந்த அலுவலகத்தில் பணியாற்றிய ஊழியர்களுக்கும், கட்டட உரிமையாளருக்கும், வாகன உரிமையாளர்களுக்கும் உரிய தொகையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

