/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மானாமதுரை பிடாரியம்மன் கோயில் விழா காப்புக்கட்டுதலுடன் துவக்கம்
/
மானாமதுரை பிடாரியம்மன் கோயில் விழா காப்புக்கட்டுதலுடன் துவக்கம்
மானாமதுரை பிடாரியம்மன் கோயில் விழா காப்புக்கட்டுதலுடன் துவக்கம்
மானாமதுரை பிடாரியம்மன் கோயில் விழா காப்புக்கட்டுதலுடன் துவக்கம்
ADDED : செப் 25, 2024 04:20 AM
மானாமதுரை : மானாமதுரை அண்ணாதுரை சிலை அருகேயுள்ள எல்லை பிடாரியம்மனை ஊரின் காவல் தெய்வமாக வழிபட்டு வருகின்றனர். புரட்டாசியில் நடைபெறும் செவ்வாய் சாற்று விழாவை முன்னிட்டு மானாமதுரை கிருஷ்ணராஜபுரம் கிராம மக்கள் விரதமிருந்து தங்களது வீடுகளில் சமைக்கப்பட்ட அசைவ உணவுகளை மண் சட்டிகளில் வைத்து வீதிகளின் வழியே ஊர்வலமாக கோயிலுக்கு கொண்டு வந்து அம்மனுக்கு படையலிட்டு வழிபாடு செய்வர்.
விழாவிற்காக நேற்று காலை கோயில் வளாகத்தில் முகூர்த்தக்கால் நடப்பட்டு காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது.பின்னர் எல்லைப்பிடாரி அம்மனுக்கு அபிஷேக,ஆராதனை, தீபாராதனை நடைபெற்றது. இதையடுத்து மானாமதுரை கிருஷ்ணராஜபுரம் கிராம மக்கள் அம்மனை வழிபட்டு தங்களது விரதத்தை துவக்கினர்.