/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தலைமை ஆசிரியர் மகன் மீது தாக்குதல் மானாமதுரை போலீஸ் விசாரணை
/
தலைமை ஆசிரியர் மகன் மீது தாக்குதல் மானாமதுரை போலீஸ் விசாரணை
தலைமை ஆசிரியர் மகன் மீது தாக்குதல் மானாமதுரை போலீஸ் விசாரணை
தலைமை ஆசிரியர் மகன் மீது தாக்குதல் மானாமதுரை போலீஸ் விசாரணை
ADDED : செப் 24, 2024 04:46 AM
மானாமதுரை: மானாமதுரை அருகே கொம்புகாரனேந்தல் அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியராக பணியாற்றிய தண்ணாயிரமூர்த்தி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அப்பள்ளியில் படிக்கும் 9ம் வகுப்பு படிக்கும் அவரது மகனை ஆசிரியர் ஒருவர் தாக்கியதில் காயமடைந்து சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கொம்புகாரனேந்தல் அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியராகபணியாற்றிய தண்ணாயிரமூர்த்தி மீது புகார் கூறி பெற்றோர்கள் மற்றும் கிராம மக்கள் கடந்த செப்.13ம் தேதி போராட்டம் நடத்தியதை தொடர்ந்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து அவரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
இந்நிலையில் அவரது மகன் அப்பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். அவரது தந்தையும், முன்னாள் தலைமை ஆசிரியருமான தண்ணாயிரமூர்த்தி பள்ளி அலுவலகத்தில் பீரோவில் உள்ள அவரது பத்திரத்தை எடுத்து வருமாறு மகன், மனைவியை அனுப்பி வைத்தார்.
இருவரும் பள்ளி அலுவலகத்தில் உள்ளவர்களிடம் கூறிவிட்டு பீரோவில் இருந்த பத்திரத்தை எடுத்து விட்டு வரும்போது ஆசிரியர் ஒருவர் அந்த மாணவரிடம் பீரோ சாவியை கேட்டு வற்புறுத்தி அந்த மாணவரை தாக்கியதில் காயமடைந்தார்.
மானாமதுரை அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று பின்னர் மேல்சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். மானாமதுரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

