/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மானாமதுரை ரயில்வே ஜங்ஷனில் போதிய கூரை இல்லாததால் அவதி
/
மானாமதுரை ரயில்வே ஜங்ஷனில் போதிய கூரை இல்லாததால் அவதி
மானாமதுரை ரயில்வே ஜங்ஷனில் போதிய கூரை இல்லாததால் அவதி
மானாமதுரை ரயில்வே ஜங்ஷனில் போதிய கூரை இல்லாததால் அவதி
ADDED : ஜன 07, 2026 05:45 AM

மானாமதுரை: மானாமதுரை ரயில்வே ஸ்டேஷன் பிளாட்பாரத்தில் போதிய கூரை இல்லாததால் பயணிகள் வெயில், மழை காலங்களில் சிரமப்படுகின்றனர்.
தென் மாவட்டங்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மானாமதுரை ரயில்வே ஜங்ஷன் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டதாகும்.
இங்கிருந்து விருதுநகர், ராமநாதபுரம்,சிவகங்கை, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் தினம் தோறும் பல்வேறு ஊர்களுக்கு பயணம் செய்கின்றனர்.
மானாமதுரை ரயில்வே ஜங்ஷன் வழியாக ராமேஸ்வரத்திலிருந்து சென்னைக்கு தினமும் 3 எக்ஸ்பிரஸ் ரயில்களும், மதுரை, திருச்சி, விருதுநகர், ராமேஸ்வரம் உள்ளிட்ட ஊர்களுக்கு பயணிகள் ரயில்களும் இவை தவிர 3 நாட்களுக்கு ஒரு முறை மற்றும் வாரத்திற்கு ஒரு முறை என பல ரயில்கள் இவ்வழியாக இயக்கப்படுகிறது.
இந்த ரயில்வே ஜங்ஷனில் அம்ரூத் திட்டத்தின் கீழ் புனரமைப்பு செய்ய வேண்டுமென பயணிகள் கோரிக்கை விடுத்தும் இதுவரை எவ்வித பணிகளும் நடைபெறாமல் உள்ளது. மேலும் இங்குள்ள 4 பிளாட்பாரங்களிலும் ரயில் பெட்டிகள் நிற்கும் இடங்களில் போதிய கூரை வசதி இல்லாத காரணத்தினால் வெயில் மற்றும் மழைக்காலங்களில் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர்.
ரயில்வே ஜங்ஷன் வளாகத்தில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட கட்டடங்கள் மிகவும் சேதமடைந்து எப்போது இடிந்து விழுமோ என்ற நிலையில் உள்ளதால் உடனடியாக இடித்துவிட்டு புதிய கட்டடங்கள் கட்ட வேண்டுமெனவும், புதிதாக கூரை அமைக்க வேண்டும் எனவும் பயணிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

