/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மானாமதுரை வைகை ஆற்றில் தண்ணீர் நகராட்சி சார்பில் தடுப்பு அமைப்பு
/
மானாமதுரை வைகை ஆற்றில் தண்ணீர் நகராட்சி சார்பில் தடுப்பு அமைப்பு
மானாமதுரை வைகை ஆற்றில் தண்ணீர் நகராட்சி சார்பில் தடுப்பு அமைப்பு
மானாமதுரை வைகை ஆற்றில் தண்ணீர் நகராட்சி சார்பில் தடுப்பு அமைப்பு
ADDED : அக் 26, 2024 05:07 AM

மானாமதுரை: மானாமதுரை வைகை ஆற்றில் தண்ணீர் செல்வதால் மக்கள் ஆற்றை கடந்து செல்லாமல்இருக்க நகராட்சி நிர்வாகம் சார்பில் ஆற்றின் ஓரத்தில்தடுப்பு அமைக்கப்பட்டுள்ளன.
வைகை ஆறு தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்கள் வழியாக சென்று ராமநாதபுரம் அருகே கடலில் கலக்கிறது.
மேற்கண்ட 5 மாவட்டங்களிலும் ஆயிரக்கணக்கான எக்டேர் பரப்பளவு உள்ள விவசாய நிலங்கள் வைகை ஆற்றில் வரும் தண்ணீரைக் கொண்டு பாசன வசதி பெறுவதோடு மட்டுமில்லாமல் ஆயிரக்கணக்கான கூட்டு குடிநீர் திட்டங்களும் இதன்மூலம் பயன் பெற்று வருகின்றன.
இந்நிலையில் மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக வைகை ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் நிலையில் மானாமதுரை வைகை ஆற்றுப்பகுதிகளில் தண்ணீர் செல்வதையடுத்து நகர் பகுதியில் உள்ள வைகை ஆற்றங்கரை ஓரங்களில் நகராட்சி நிர்வாகம் சார்பில் தடுப்பு அமைக்கப்பட்டு ள்ளன.
நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
வைகை ஆற்றில் கடந்த சில நாட்களாக தண்ணீர் வருவதை தொடர்ந்தும், மேலும் வைகை அணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட உள்ளதையடுத்தும் வைகை ஆற்றுக்குள் மக்கள் மற்றும் கால்நடைகள் இறங்காதவாறு தடுப்பு அமைக்கப்பட்டுள்ளன.
இதனை மீறி பொதுமக்கள் ஆற்றுக்குள் இறங்க வேண்டாம் என்றும், கால்நடைகளை மேய்ச்சலுக்கும், குளிப்பாட்டவும் வைகை ஆற்றுக்குள்செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்படுகிறது என்றனர்.