/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கண்டுபட்டி மஞ்சு விரட்டு காளை முட்டி ஒருவர் பலி
/
கண்டுபட்டி மஞ்சு விரட்டு காளை முட்டி ஒருவர் பலி
ADDED : ஜன 19, 2024 11:22 PM

சிவகங்கை:சிவகங்கை மாவட்டம், கண்டுபட்டி பழைய அந்தோணியார் சர்ச்சில் தை 5ல் பொங்கல் விழா நடைபெறும். அன்றைய தினம் சர்ச் முன் பொங்கல் வைத்து வழிபடுவர்.
நேற்று காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை ஊத்திக்குளம், மேலக்காடு, கண்டுபட்டியில் 653 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. அதில், 550 காளைகள் திறந்த வெளி பொட்டலில் அவிழ்த்து விடப்பட்டன.
ஊத்திக்குளம் அருகே கோவினிபட்டி பூரணம் மகன் பூமிநாதன், 50, தன் காளையை அவிழ்த்து விட்டார். அந்த காளை அவர் கழுத்தில் குத்தியது.
அதில் பலத்த காயத்துடன் சிவகங்கை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி பலியானார். காளைகள் முட்டியதில் 119 பேர் காயமுற்றனர்.
இவர்களில் 30 பேரை சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கூட்டத்தை கலைத்து விட்டு ஜீப்பிற்கு சென்ற காரைக்குடி போலீஸ்காரர் சிவகங்கை அருகே கீழவாணியங்குடியைச் சேர்ந்த உடையனசாமி, 50, முதுகில் காளை குத்தியதில் காயமுற்றார்.