ADDED : ஏப் 10, 2025 05:59 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் நடந்த இளவட்ட மஞ்சுவிரட்டில் ஏராளமான காளைகள் பங்கேற்றன.
சிங்கம்புணரியில் பங்குனி வழிபாட்டை முன்னிட்டு நேற்று இளவட்ட மஞ்சுவிரட்டு நடத்தப்பட்டது. முழுவீரன் தெருவில் உள்ள தொழுவில் சேவுகப்பெருமாள் கோயில் காளைகளுக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு அவிழ்த்து விடப்பட்டன. கடைவீதியில் ஓடிவந்த கோயில் மாடுகளை மாடுபிடி வீரர்கள் தொட்டு வணங்கினர்.
இதைத்தொடர்ந்து மற்ற மாடுகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்க்கப்பட்டன. சீரணி அரங்கம், கடை வீதியில் கட்டுமாடுகளும் அவிழ்த்து விடப்பட்டன. சீறிப்பாய்ந்த காளைகளை இளைஞர்கள் அடக்க முயன்றனர். ஒரு சில காளைகள் பிடிபட்டன. காளைகள் முட்டியதில் 5 பேர் காயமடைந்தனர்.