/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிவகங்கை ஐயப்பன் கோயிலில் டிச.26ல் மண்டல பூஜை
/
சிவகங்கை ஐயப்பன் கோயிலில் டிச.26ல் மண்டல பூஜை
ADDED : டிச 11, 2025 05:31 AM
சிவகங்கை: சிவகங்கை காசிவிஸ்வநாதர் கோயிலில் உள்ள ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை விழா டிச., 26 ல் துவங்குகிறது.
சிவகங்கை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட காசி விஸ்வநாதர் கோயிலில் எழுந்தருளியுள்ள ஐயப்பன் சன்னதியில் ஐயப்ப பக்தர்கள் சார்பில் மண்டல பூஜை ஆண்டு தோறும் நடைபெறும். இந்த ஆண்டிற்கான மண்டல பூஜை டிச., 26 அன்று இரவு 7:00 மணிக்கு ஐயப்பனுக்கு முதல் கால சங்காபிேஷக பூஜை நடைபெறும்.
டிச., 27 அன்று காலை 9:00 மணிக்கு கஜபூஜை, 2ம் கால சங்காபிேஷக பூஜை, அன்னதானம் நடைபெறும். அன்று மாலை 6:30 மணிக்கு யானை வாகனத்தில் தேரோடும் வீதிகளில் ஐயப்பன் வீதிஉலா நடைபெறும். ஐயப்ப பக்தர்கள் குழுவினர் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

