ADDED : டிச 27, 2024 04:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புவனம்: திருப்புவனத்தில் மண்டல பூஜையை முன்னிட்டு நேற்று ஐயப்ப சுவாமி வீதியுலா நடந்தது.
திருப்புவனம் நெல்முடிகரையில் ராமச்சந்திரன் குருசாமி தலைமையில் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து ஐயப்பனை தரிசனம் செய்து வருகின்றனர். நேற்று மண்டல பூஜையை முன்னிட்டு ஐயப்பனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. பக்தர்கள் ஐயப்பன் விக்ரகத்துடன் வீதியுலா வந்தனர். அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை ஞானசேகரன் தலைமையிலான ஐயப்ப பக்தர்கள் செய்திருந்தனர்.