/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ஐயப்பன் கோயில்களில் மண்டல பூஜை
/
ஐயப்பன் கோயில்களில் மண்டல பூஜை
ADDED : டிச 28, 2025 05:32 AM

சிவகங்கை: சிவகங்கை காசிவிஸ்வநாதர் கோயில் வளாகத்தில் உள்ள ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை விழாவை யொட்டி நேற்று ஐயப்பன் ஊர்வலம் நடந்தது.
சிவகங்கை தேவஸ்தானத்திற்குட்பட்ட காசி விஸ்வநாதர் கோயிலில் எழுந்தருளியுள்ள ஐயப்பன் சன்னதியில் பாண்டி குருநாதர் அன்னதானக்குழு மற்றும் டிஎஸ்ஜி நண்பர்கள் சார்பில் மண்டல பூஜை ஆண்டு தோறும் நடைபெறும்.
இந்த ஆண்டிற்கான மண்டல பூஜை நேற்று முன்தினம் இரவு 7:00 மணிக்கு ஐயப்பனுக்கு முதல் கால சங்காபிேஷக பூஜையுடன் துவங்கியது.
நேற்று காலை 9:00 மணிக்கு கஜபூஜை, இரண்டாம் கால சங்காபிேஷக பூஜை, அலங்காரம் தீபாராதனை அதனை தொடர்ந்து அன்னதானம் நடந்தது. மாலை 6:30 மணிக்கு ஐயப்ப சுவாமி மின் அலங்காரத்துடன் யானை வாகனத்தில் வீதிஉலா வந்தார். இரவு 9:00 மணிக்கு ஐயப்ப சுவாமிக்கு புஷ்பாஞ்சலி பூஜையுடன் விழா நிறைவு பெற்றது.
*மானாமதுரை தர்ம சாஸ்தா ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை விழாவை முன்னிட்டு உற்சவர் யானை வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர் களுக்கு காட்சி அளித்தார்.
நேற்று முன்தினம் மாலை 6:30 மணிக்கு உற்சவர் ஐயப்ப சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் செய்யப்பட்டு அபிஷேக,ஆராதனைக்கு பின் யானை வாகனத்திற்கு எழுந்தருளினார்.
ரதத்தை பக்தர்கள் 4 ரத வீதிகளில் இழுத்து வந்தனர். நேற்று நடைபெற்ற மண்டல பூஜையை முன்னிட்டு மூலவர் ஐயப்பன் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை,பஜனை, அன்னதானம் நடந்தது.
*திருப்புவனத்தில் ஐயப்பசுவாமி வீதியுலா உற்சவம் நடந்தது. திருப்புவனம் நெல்முடிகரையில் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து ஐயப்பனை தரிசனம் செய்து வருகின்றனர். நேற்று மண்டல பூஜையை முன்னிட்டு ஐயப்பனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. ஐயப்ப பக்தர்கள் பலரும் ஐயப்பன் விக்ரகத்துடன் வீதியுலா வந்தனர். ஏற்பாடுகளை ஞானசேகரன் , ஒண்டிப்புலி தலைமையிலான பக்தர்கள் செய்திருந்தனர்.
* தேவகோட்டை நித்திய கல்யாணி புரம் ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜையை முன்னிட்டு தினசரி சிறப்பு அபிஷேகம் பூஜைகள் நடைபெற்றன. பெண்கள் திருவிளக்கு பூஜை நடத்தினர். மண்டல பூஜையை தொடர்ந்து ஆபரண பெட்டி முக்கிய வீதிகளில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.அபிஷேகத்தை தொடர்ந்து ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன.
*தேவகோட்டை தர்ம சாஸ்தா கோயிலில் ஐயப்பனுக்கு சிறப்பு அபிேஷக பூஜைகள் நடந்தன. மண்டல பூஜை முதல்நாள் ஐயப்பனுக்கு பாலாபிஷேகம், பொன்னுாஞ்சல் நடந்தது. மறுநாள் ஏகதின லட்சார்ச்சனை நடைபெற்றது. நேற்று முன்தினம் பெண்கள் திருவிளக்கு பூஜை நடத்தினர். நேற்று காலை ஐயப்பனுக்கு மண்டல அபிஷேகம் தொடர்ந்து பூஜைகள் நடந்தன.

