ADDED : டிச 28, 2025 05:31 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: சிவகங்கையில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கருப்பு பட்டை அணிந்து காலவரையற்ற வேலை நிறுத்த ஆயத்த மாநாடு ஊர்வலம்நடத்தினர்.
ஒருங்கிணைப்பாளர் சகாய தைனேஸ், நாகராஜன் தலைமை வகித்தனர். ராதகிருஷ்ணன், ராம்குமார் முன்னிலை வகித்தனர். மாநில ஒருங்கிணைப்பாளர் மலர்விழி மாநாட்டை துவக்கி வைத்தார். உறுப்புச் சங்கங்கள் சார்பில் ஜீவானந்தம், செல்வக்குமார், சேவுகமூர்த்தி, புரட்சி தம்பி, பாண்டியராஜன், அசோக்குமார், சமயத்துரை, மாரி, தமிழரசன், தனபால், வேல்முருகன்,பாண்டி பேசினர். பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

