/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தாயமங்கலம் கோயிலில் மண்டலாபிஷேக விழா
/
தாயமங்கலம் கோயிலில் மண்டலாபிஷேக விழா
ADDED : செப் 26, 2024 04:53 AM
இளையான்குடி: தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் வரும் அக்டோபர் 8ஆம் தேதி மண்டலாபிஷேக விழா நடைபெற உள்ளது.
தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் புதிதாக ஏழு நிலை ராஜகோபுரம் கட்டப்பட்டும் கோயிலில் மராமத்து செய்யப்பட்டு கடந்த ஆகஸ்ட் 22ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து மண்டலாபிஷேக விழாவிற்காக தினந்தோறும் அபிஷேக ஆராதனை மற்றும் பூஜைகள் நடைபெற்று வருகின்றன.
வரும் அக். 7ம் தேதி மாலை மண்டலாபிஷேகத்திற்கான பூஜைகள் ஆரம்பிக்கப்பட்டு அக்.8ம் தேதி காலை 7:00 மணிக்கு யாகசாலை பூஜைகள் ஆரம்பமாகின்றன. தொடர்ந்து காலை 10:30 மணிக்கு 108 கலசாபிஷேகம் நடத்தப்பட்டு அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை,தீபாராதனை நடைபெற உள்ளது.
ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் வெங்கடேசன் மற்றும் கோயில் பணியாளர்கள், மண்டலாபிஷேக விழா கமிட்டியினர்,கிராம மக்கள் செய்து வருகின்றனர்.