/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தாயமங்கலம் கோயிலில்வெளிப்பிரகாரத்தில் மண்டபம்
/
தாயமங்கலம் கோயிலில்வெளிப்பிரகாரத்தில் மண்டபம்
ADDED : பிப் 03, 2024 04:28 AM

இளையான்குடி, : தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் பக்தர்கள் மூலம் ஹிந்து சமய அறநிலையத் துறைக்கு ஆண்டு தோறும் கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் கிடைக்கும் நிலையில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டுமென பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே தாயமங்கலத்தில் புகழ்பெற்ற முத்துமாரியம்மன் கோயிலில் நடக்கும் பங்குனி விழாவில் பக்தர்கள்வந்திருந்து தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றி வருகின்றனர்.
பக்தர்கள் மூலம் ஹிந்து சமய அறநிலைத்துறைக்கு கோடிக்கணக்கான ரூபாய் வருவாயாக கிடைத்து வருகிற நிலையில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தருவதில்லை என பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.
பக்தர்கள் சிலர் கூறுகையில், கோயிலில் போதுமான வசதி இல்லை. குறிப்பாக முத்துமாரியம்மன் கோயில் சன்னதியை சுற்றி புதிய மண்டபம் கட்ட கோரிக்கை விடுத்து பல ஆண்டுகளாகியும் இதுவரை கட்டாததால் திருவிழா நேரங்களில் கோயில் நிர்வாகத்தினர் தகரங்களைக் கொண்டு தற்காலிகமாக மேற்கூரை அமைத்து வருகின்றனர். மழை மற்றும் வெயில் காரணமாக பக்தர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
கோயில் வளாகத்தை சுற்றிலும் பக்தர்கள் தங்கி சமையல் செய்ய போதுமான மண்டபங்கள் இல்லாத காரணத்தினாலும் வெட்ட வெளியில் பக்தர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.ஹிந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் பக்தர்களின் நலன் கருதி உடனடியாக கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

