/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கல்லல் அருகே சுற்றுலா இடமாக மாறிய மணிமுத்தாறு மதகு அணை
/
கல்லல் அருகே சுற்றுலா இடமாக மாறிய மணிமுத்தாறு மதகு அணை
கல்லல் அருகே சுற்றுலா இடமாக மாறிய மணிமுத்தாறு மதகு அணை
கல்லல் அருகே சுற்றுலா இடமாக மாறிய மணிமுத்தாறு மதகு அணை
ADDED : அக் 18, 2024 05:26 AM

காரைக்குடி: கல்லல் ஒன்றியத்திற்கு உட்பட்ட செவரக்கோட்டை ஊராட்சி அருகே மணிமுத்தாறு மதகு அணை உள்ளது. கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக கண்மாய் பலவும் நிரம்பி வருகிறது. செவரக்கோட்டை அருகே உள்ள ஏரியூர் கண்மாய் நிரம்பி மணிமுத்தாறு வழியாக செவரக்கோட்டை மதகுணைக்கு வருகிறது.
இந்த மதகு அணையில் இருந்து செவரக்கோட்டை உட்பட சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த பல்வேறு கண்மாய்களுக்கும் பாசனத்திற்கு தண்ணீர் செல்கிறது. கண்மாய் நிரம்பியதை தொடர்ந்து உபரிநீர் மணிமுத்தாற்றில் விடப்படுகிறது.
இந்த மதகணையில் அதிக அளவில் தண்ணீர் வரத்து உள்ளது. தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளதால் கல்லல் செவரக்கோட்டை உட்பட பல்வேறு பகுதி மக்களும் குளிப்பதற்கு ஆர்வமுடன் வரத் தொடங்கியுள்ளனர்.