/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மஞ்சுவிரட்டு காளைகளுக்கு பாதை அறியும் பயிற்சி
/
மஞ்சுவிரட்டு காளைகளுக்கு பாதை அறியும் பயிற்சி
ADDED : ஜன 13, 2026 05:33 AM
சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் மஞ்சு விரட்டு நிகழ்ச்சிக்காக காளைகளுக்கு பாதை அறியும் பயிற்சி அளிக்கப்படுகிறது.
தமிழகத்தில் மாட்டுப் பொங்கல் தொடங்கி தொடர்ந்து சில மாதங்களுக்கு மஞ்சுவிரட்டு நடத்தப்படும். குறிப்பாக மாட்டுப்பொங்கல் அன்று சிங்கம்புணரி, காளாப்பூர், சூரக்குடி, பிரான்மலை, முறையூர், சதுர்வேத மங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் பொங்கல் வைத்த பிறகு மதியம் 1:00 முதல் மாலை 5:00 மணி வரை மஞ்சுவிரட்டு நடை பெறும்.
இம்மஞ்சுவிரட்டுகளில் அவிழ்க்கப்படும் மாடுகளுக்கு பாதை அறியும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. விவசாயிகள் மஞ்சுவிரட்டி மாடுகளை வீட்டிற்கும், மஞ்சுவிரட்டு தொழுவுக்கும் என தினமும் மூன்று முறை நடக்க வைத்து அழைத்துச் செல்வர்.
இப்படி செய்யும் போது காளைகள் பாதைகளை அறிந்துவைத்து, வழிதவறி செல்லாமல் நேரடியாக வீடுகளுக்கு வந்துவிடும். பாரம்பரியமாக மாடுகளுக்கு இப் பயிற்சி அளிக்கப் படுவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

