ADDED : ஏப் 13, 2025 07:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புத்துார் : பட்டமங்கலத்தில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு நேற்று காலை மஞ்சுவிரட்டு நடந்தது.
பட்டமங்கலத்தில் ஏப்.3ல் பங்குனித் திருவிழா துவங்கி நடந்து வருகிறது. நேற்று காலை சுவாமி வழிபாட்டிற்கு பின்னர் காலை 11:00 மணிக்கு மஞ்சுவிரட்டு தொடங்கியது.
தொழுவில் கோயில்காளைகள் உள்ளிட்ட சில காளைகள் அவிழ்க்கப்பட்டன.
தொழுவிற்கு வெளியே கட்டுமாடுகளாக நூற்றுக்கணக்கான காளைகள் அவிழ்க்கப்பட்டன. இருவர் காயம் அடைந்தனர்.
அனுமதி பெறாமல் நடத்தப்பட்ட மஞ்சுவிரட்டு குறித்து திருக்கோஷ்டியூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.