/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மஞ்சுவிரட்டு: 5 பேர் மீது வழக்கு
/
மஞ்சுவிரட்டு: 5 பேர் மீது வழக்கு
ADDED : ஜூலை 04, 2025 03:00 AM
திருப்புத்துார்: கல்லல் ஒன்றியம் பெரிச்சிக்கோயிலில் ஆனித் திருவிழாவை முன்னிட்டு நடந்த மஞ்சுவிரட்டில் 350 காளைகள் பங்கேற்றன. அனுமதியில்லாமல் நடத்திய 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
பெரிச்சிக்கோயில் சுகந்தவனேஸ்வரர் கோயில் ஆனித்திருவிழாவை முன்னிட்டு நேற்று மஞ்சுவிரட்டு நடந்தது. காலை 10:30 மணிக்கு கோயில் காளை அவிழ்க்கப்பட்டு மஞ்சுவிரட்டு துவங்கியது. அப்பகுதி வயல்களில் கட்டு மாடுகளாக அவிழ்க்கப்பட்டன. பல மாவட்டங்களைச் சேர்ந்த 350க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.
சுற்று வட்டாரக் கிராமத்தினர் பங்கேற்றனர். மாடுகள் முட்டியதில் பார்வையாளர்கள் பலர் லேசான காயமடைந்தனர். படுகாயமடைந்த பெண் உள்ளிட்ட இருவர் மட்டும் திருப்புத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அனுமதியின்றி நடந்த மஞ்சுவிரட்டு ஏற்பாட்டாளர்கள் 5 பேர் மீது நாச்சியாபுரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.