ADDED : ஜூலை 10, 2025 10:54 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை; மேலப்பிடாவூர் வெள்ளாரப்பன் என்ற முத்தையா அய்யனார் கோயில் புரவி எடுப்பு விழாவை முன்னிட்டு நேற்று கோயில் முன்புறமுள்ள திடலில் வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது.
100க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர்.
பிடிபடாத மாடுகளின் உரிமையாளர்களுக்கும், மாட்டை பிடித்த வீரர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
ஏற்பாடுகளை மேலப்பிடாவூர் கிராம மக்கள் மற்றும் விழா கமிட்டியினர் செய்தனர்.

