/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மந்தை முத்தாலம்மன் கோயில் கும்பாபிஷேகம்
/
மந்தை முத்தாலம்மன் கோயில் கும்பாபிஷேகம்
ADDED : ஜன 30, 2024 01:47 AM

சிங்கம்புணரி : எஸ்.புதுார் ஒன்றியம் நாகமங்கலம் மந்தை முத்தாலம்மன் கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.
ஜன.27ம் தேதி அனுக்ஜை, தனபூஜை, விக்னேஸ்வர பூஜையுடன் யாகசாலை பூஜை தொடங்கியது. நேற்று காலை 6:00 மணிக்கு பூர்வாங்க பூஜை நடந்தது. 9:00 மணிக்கு கடம் புறப்பாடு நடந்தது.
10:00 மணிக்கு கோயில் விமானத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து நாகமங்கலம் சிங்கப்பூர்வாழ் இளைஞர்களால் அன்னதானம் நடந்தது.
முன்னதாக கும்பாபிஷேகத்தை முன்னிட்டு அப்பகுதி முஸ்லிம்கள் கோயிலுக்கு ஊர்வலமாக தேங்காய், பழம், வெற்றிலை ஆகியவற்றை சீர் ஆக எடுத்து வந்து கோயில் விழாக்குழுவினரிடம் அளித்தனர். அவர்களுக்கு கோயில் விழாக்குழு சார்பில் மரியாதை செய்யப்பட்டது.
கும்பாபிஷேகத்தில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்றனர்.