/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிவகங்கையில் வைரஸ் காய்ச்சல்சளி, இருமலால் ஏராளமானோர் அவதி
/
சிவகங்கையில் வைரஸ் காய்ச்சல்சளி, இருமலால் ஏராளமானோர் அவதி
சிவகங்கையில் வைரஸ் காய்ச்சல்சளி, இருமலால் ஏராளமானோர் அவதி
சிவகங்கையில் வைரஸ் காய்ச்சல்சளி, இருமலால் ஏராளமானோர் அவதி
ADDED : நவ 21, 2024 04:41 AM
சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் பருவ கால மாற்றத்தினால் ஏற்படும் வைரஸ் காய்ச்சல் பாதிப்பால் குழந்தைகள் முதல் பெரியோர் வரை சளி, இருமலால் அவதிப்படுகின்றனர்.
சிவகங்கை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு தினமும் 100க்கும் மேற்பட்டோர் புறநோயாளிகளாக சிகிச்சை பெறுகின்றனர். சாதாரண வைரஸ் காய்ச்சலின் தாக்கம் 4 முதல் 5 நாட்கள் வரை இருக்கும். சிலருக்கு மட்டும் 7ல் இருந்து 10 நாட்கள் வரை தாக்கம் இருக்கும். மருத்துவரிடம் சிகிச்சை மேற்கொண்டால் சரியாகி விடும். மருத்துவக் கல்லுாரியில் புறநோயாளிகள் பிரிவில் நேற்று மட்டும் 7:00 மணியில் இருந்து 12:00 மணி வரை 47 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு வந்தனர்.
குழந்தைகள் நலப்பிரிவு மருத்துவர்கள் கூறுகையில், ஆண்டுதோறும் ப்ளூ காய்ச்சல் எனப்படும் வைரஸ் காய்ச்சல் ஏற்படுவது வழக்கம். குழந்தைகளை எளிதில் தாக்கும் இந்த வைரஸ் காய்ச்சல், பள்ளிக்கு செல்வதால் மற்ற குழந்தைகளுக்கும் பரவுகிறது.வீடுகளில் பெற்றோருக்கும் வயதானோருக்கு பாதிப்பு ஏற்படுகிறது. இந்த காய்ச்சல், நான்கு முதல் ஆறு நாட்கள் வரை இருக்கும். காய்ச்சலால் உயிருக்கு பாதிப்பு கிடையாது என்பதால், மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றார்.