/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
இளையான்குடி கோயிலில் மாறநாயனார் குருபூஜை
/
இளையான்குடி கோயிலில் மாறநாயனார் குருபூஜை
ADDED : ஆக 20, 2025 06:59 AM
இளையான்குடி : இளையான்குடி கோயிலில் வரும் 23ம் தேதி இளையான்குடி மாறநாயனார் குருபூஜை விழா நடைபெற உள்ளது.
63 நாயன்மார்களில் ஒருவரான இளையான்குடி மாறநாயனார் குருபூஜை விழா ஆவணியில் மகம் நட்சத்திரத்தில் நடைபெறும்.
இந்த ஆண்டு வரும் 23ம் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு சிவகங்கை சமஸ்தானம்,தேவஸ்தானம் நிர்வாகத்துக்குட்பட்ட ராஜேந்திர சோழீஸ்வரர் கோயிலில் அதிகாலை சுவாமிகளுக்கு அபிஷேக,ஆராதனை, பூஜை,திருமுறை பாராயணம், அன்னதானம் மற்றும் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
மாலை சூரியனார் கோயில் சிவாக்கர தேசிகரின் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இரவு நாயன்மாருக்கு சிவபெருமான் ஜோதி காட்சியளிப்பதும், சிவனடியார்களின் வீதிஉலாவும் நடைபெற உள்ளது.