ADDED : ஜன 05, 2025 11:57 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை; சிவகங்கையில் நடந்த அண்ணாத்துரை பிறந்த நாள் மாரத்தான் ஓட்ட போட்டியை  அமைச்சர் பெரியகருப்பன் துவக்கி வைத்தார். கலெக்டர் ஆஷா அஜித் தலைமை வகித்தார். காரைக்குடி எம்.எல்.ஏ., மாங்குடி முன்னிலை வகித்தார்.
மாவட்ட விளையாட்டு அலுவலர் ரமேஷ் கண்ணன் வரவேற்றார். மாரத்தான் ஓட்ட போட்டியை அமைச்சர் துவக்கி வைத்தார். மாணவ, மாணவிகளுக்கென தனித்தனியாக 5 மற்றும் 8 கி.மீ., துார ஓட்ட போட்டி நடந்தது. இதில் 166 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
இதில் முதல் மூன்று இடம் பிடித்தவர்களில் முதல் பரிசு ரூ.5,000, இரண்டாம் பரிசு ரூ.3,000, மூன்றாம் பரிசு ரூ.2,000, பரிசு 4 முதல் 10 வரை தலா ரூ.1,000 வரையும் பாராட்டு சான்றும் வழங்கப்பட்டன. தாசில் தார் சிவராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

