/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ரூ.60 கோடி செலவழித்தும் பயனில்லாத மறவமங்கலம் நீட்டிப்பு கால்வாய்
/
ரூ.60 கோடி செலவழித்தும் பயனில்லாத மறவமங்கலம் நீட்டிப்பு கால்வாய்
ரூ.60 கோடி செலவழித்தும் பயனில்லாத மறவமங்கலம் நீட்டிப்பு கால்வாய்
ரூ.60 கோடி செலவழித்தும் பயனில்லாத மறவமங்கலம் நீட்டிப்பு கால்வாய்
ADDED : அக் 29, 2024 05:11 AM
சிவகங்கை: சிவகங்கையில் இருந்து மறவமங்கலத்திற்கு செல்லும் பெரியாறு மறவமங்கலம் நீட்டிப்பு கால்வாயை பராமரித்து மறவமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு தண்ணீர் செல்ல வழி செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
முல்லை பெரியாறு கால்வாய் ஒருபோக சாகுபடியில் சிவகங்கை மாவட்டம் கடைமடைப்பகுதி. முல்லை பெரியாற்றில் இருந்து ஷீல்டு கால்வாய், லெசிஸ் கால்வாய், கட்டாணிபட்டி 1, 2 கால்வாய்,48ஆம் மடை கால்வாய் மூலம் 7 ஆயிரம் ஏக்கர்நிலங்கள் பாசனம் பெறுகிறது.
பெரியாறு தண்ணீர் மாணிக்கம் கால்வாய், சிங்கம்புணரி கால்வாய், மறவமங்கலம் நீட்டிப்பு கால்வாய்களுக்கும் செல்லும் வகையில் அமைக்கப்பட்டுஉள்ளன. இதில் மறவமங்கலம் நீட்டிப்பு கால்வாய் 30 ஆண்டுகளுக்கு முன் ரூ.60 கோடி செலவில் அமைக்கப்பட்டு பயன்பாடு இல்லாமல் உள்ளது.
கால்வாயில் பெரும் பகுதி ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ளது. சில இடங்களில் கால்வாய் சேதமடைந்து முட்புதர்களாக மாறி பயன்பாடு இல்லாத நிலையில் உள்ளது.
மறவமங்கலம் நீட்டிப்பு கால்வாய் மூலம் காளையார்கோவில், இளையான்குடி பகுதியில் உள்ள 332 கண்மாய்கள் மூலம் 8 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறும். ஆனால் இன்று வரை முல்லை பெரியாற்றில் இருந்து இந்த கால்வாய் மூலம் பாசனத்திற்கு தண்ணீர் வரவில்லை.
எனவே மாவட்ட நிர்வாகம் மறவமங்கலம் நீட்டிப்பு கால்வாயை சீரமைத்து இந்த பகுதி மக்களுக்கு பாசன வசதி பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்திய கம்யூ., மாவட்ட துணை செயலாளர் மருது கூறுகையில், மறவமங்கலம் நீட்டிப்பு கால்வாய் காளையார்கோவில் ஒன்றியத்தில் உள்ள விவசாய மக்கள் பயன்பெற அமைக்கப்பட்டது. ஆனால் இந்த கால்வாய் முழுவதும் சேதமடைந்துஉள்ளது. சில இடங்களில் கால்வாயை திட்டமிட்டே சேதப்படுத்தியுள்ளனர். சிலர் கால்வாயை ஆக்கிரமித்துள்ளனர்.
எனவே விவசாயிகளின் நலனில் அக்கறை கொண்டு இந்த கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்தி, சீரமைத்து இந்தபகுதி மக்கள் பயன்பெற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.