/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தனித்துவ அடையாள எண் பெற விவசாயிகளுக்கு மார்ச் 31 கடைசி
/
தனித்துவ அடையாள எண் பெற விவசாயிகளுக்கு மார்ச் 31 கடைசி
தனித்துவ அடையாள எண் பெற விவசாயிகளுக்கு மார்ச் 31 கடைசி
தனித்துவ அடையாள எண் பெற விவசாயிகளுக்கு மார்ச் 31 கடைசி
ADDED : மார் 19, 2025 06:47 AM
சிவகங்கை : பிரதமரின் கிஷான் உதவித்தொகை பெற சிவகங்கை மாவட்ட விவசாயிகள் மார்ச் 31 க்குள் தனித்துவ அடையாள எண்ணுக்கு பொது சேவை மையத்தில் பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு பிரதமரின் கிஷான் திட்டத்தில் விவசாயிக்கு ஆண்டுக்கு ரூ.6000 நிதி உதவி வழங்குகிறது. இது தவிர மத்திய, மாநில அரசுகளின் விவசாய நலத்திட்டங்களில் பயன்பெற விவசாயிகளுக்கு தனித்துவ அடையாள எண் கட்டாயம் என மத்திய அரசு தெரிவிக்கிறது. இதற்காக நில உரிமையாளர், தங்களது பட்டா சிட்டா அடங்கல், ஆதார் எண், அத்துடன் இணைத்த அலைபேசி எண் விபரங்களை, மத்திய அரசிடம் அங்கீகாரம் பெற்ற பொது சேவை மையங்களில் பதிவு செய்து, தனித்துவ அடையாள எண் பெற வேண்டும். மாவட்ட அளவில் 400 பொது சேவை மையங்கள் செயல்படுகிறது.
மாவட்ட அளவில், 1 லட்சத்து 18 ஆயிரத்து 532 விவசாயிகள் உள்ளனர். அதில் பிரதமரின் கிஷான் திட்ட நிதி உதவியை 60,221 விவசாயிகள் பெற்று வருகின்றனர். அவர்களில் 46,661 பேர் பதிவு செய்து தனித்துவ அடையாள எண் பெற்று விட்டனர். நிதி உதவி தொகை பெறும் 13,600 பேர் விரைந்து பதிவு செய்ய வேண்டும்.
ஒட்டு மொத்தமாக இது வரை 69,094 பேர் பதிவு செய்து விட்டனர். அனைத்து விவசாயிகளும் பொது சேவை மையம், வேளாண்மை அதிகாரிகளிடம் கட்டணமின்றி பதிவேற்றம் செய்து, தனித்துவ அடையாள எண்ணை பெற்று மத்திய, மாநில அரசின் நலத்திட்ட உதவிகள் அனைத்தையும் எளிதில் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.