ADDED : டிச 28, 2025 05:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி: காரைக்குடியில் மார்கழி நாட்டியாஞ்சலி, பரதநாட்டிய நிகழ்ச்சி தொடங்கியது.
காரைக்குடி அழகப்பா நுண்கலைத்துறை மற்றும் தமிழ் இசைச் சங்கம் சார்பில் மார்கழி நாட்டியஞ்சலி நிகழ்ச்சி நடைபெறுகிறது. எல்.சி.டி.எல்., அரங்கில் தொடக்க நிகழ்ச்சி நடந்தது. இதில், 40 நாடுகளைச் சேர்ந்த 300 நடன கலைஞர்கள் கலந்து கொள்கின்றனர்.
தொடக்க விழாவில் அழகப்பா அறக்கட்டளை சேர்மன் ராமநாதன் வைரவன் தலைமையேற்றார். அழகு வைரவன் முன்னிலை வகித்தார். நடன கலைஞர்கள் பிரியா, ரம்யாவை தமிழிசை சங்க செயலர் சுந்தரராமன் துணைத் தலைவர் ராகவன், சுஜாதா மோகன், லக்ஷ்மி பிரியா வாழ்த்தினர்.

