/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பயிரை பாழாக்கும் கால்நடைகள் பாதுகாக்க போராடும் விவசாயிகள்
/
பயிரை பாழாக்கும் கால்நடைகள் பாதுகாக்க போராடும் விவசாயிகள்
பயிரை பாழாக்கும் கால்நடைகள் பாதுகாக்க போராடும் விவசாயிகள்
பயிரை பாழாக்கும் கால்நடைகள் பாதுகாக்க போராடும் விவசாயிகள்
ADDED : டிச 28, 2025 05:27 AM
காரைக்குடி: காரைக்குடி அருகே பயிர்களை மாடுகள் மேய்வதால் விவசாயிகள் சேலையால் வேலி அமைத்து பாதுகாத்து வருகின்றனர்.
விவசாயிகள் கூறுகையில்: கல்லல் ஒன்றியத்தில் 4 ஆயிரம் எக்டேரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது ஏழுமாபட்டியில் நெல் விவசாயம் நடந்து வருகிறது. கடந்த ஆடி கடைசியில் நெல் விதைப்பில் ஈடுபட்டோம். ஜே.சி.எல்., ரக நெல் விவசாயம் செய்துள்ளோம். தற்போது நெல் பரிந்து வந்துள்ள நிலையில், இரவில் மாடுகள் மற்றும் மான்கள் பயிர்களை மேய்ந்து பாழாக்கி விட்டது. பாதிக்கு மேல் வைக்கோலுக்கு மட்டுமே பயன்படும். இருக்கும் பயிர்களை சேலை மூலம் வேலி அமைத்து பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். சுற்றித்திரியும் மாடுகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.