/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பஸ்களில் பயணிகளை ஏற்ற மறுப்பு திருப்புவனம், திருப்பாச்சேத்தி புறக்கணிப்பு
/
பஸ்களில் பயணிகளை ஏற்ற மறுப்பு திருப்புவனம், திருப்பாச்சேத்தி புறக்கணிப்பு
பஸ்களில் பயணிகளை ஏற்ற மறுப்பு திருப்புவனம், திருப்பாச்சேத்தி புறக்கணிப்பு
பஸ்களில் பயணிகளை ஏற்ற மறுப்பு திருப்புவனம், திருப்பாச்சேத்தி புறக்கணிப்பு
ADDED : டிச 28, 2025 05:26 AM
திருப்புவனம்: மதுரை, மானாமதுரை உள்ளிட்ட ஊர்களில் இருந்து திருப்புவனம், திருப்பாச்சேத்தி பயணிகளை ஏற்ற மறுப்பதுடன் பயணிகளை கண்டக்டர்கள் மிரட்டுவதாக புகார் எழுந்துள்ளது.
மதுரையில் இருந்து திருப்புவனம், திருப்பாச்சேத்தி வழியாக பரமக்குடி, ராமநாதபுரம், கமுதி, முதுகுளத்துார், ஆர்.எஸ்.மங்கலம், இளையான்குடி உள்ளிட்ட நகரங்களுக்கு தனியார் பஸ்கள் சென்று வருகின்றன.
தொலை துார பயணிகளை கவர இடையில் உள்ள நிறுத்தங்களை புறக்கணிப்பதுடன் பயணிகளை ஏற்ற மறுத்து அவதுாறாக பேசுவதாக பயணிகள் புகார் கூறுகின்றனர்.
அரசு பஸ்களில் பயணிகளை ஏற்ற மறுத்தால் அதிகாரிகளிடம் புகார் செய்த பின் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
ஆனால் தனியார் பஸ் கண்டக்டர்கள் குறித்து புகார் கொடுத்தால் எந்த வித நடவடிக்கையும் எடுப்பதில்லை. இரவு ஏழு மணிக்கு மேல் தனியார் பஸ்கள் திருப்புவனம், திருப்பாச்சேத்திக்குள் வராமல் பைபாஸ் ரோட்டிலேயே சென்று விடுகின்றன.
இரவு நேரத்தில் திருப்புவனம், திருப்பாச்சேத்தி பயணிகள் பரிதவித்து வருவதுடன் நீண்ட நேரம் பஸ்சிற்காக காத்து கிடக்கின்றனர்.
திருப்புவனம், திருப்பாச்சேத்தி பயணிகளை ஏற்ற மறுக்கும் தனியார் பஸ் ஊழியர்கள் மீது வட்டார போக்குவரத்து அலுவலர்கள் நடவடிக்கை எடுப்பதுடன் அவற்றிற்கான உரிமத்தையும் ரத்து செய்ய வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

