/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
நமக்கு நாமே திட்டத்தில் மார்கண்டேய தீர்த்தம் சீரமைப்பு
/
நமக்கு நாமே திட்டத்தில் மார்கண்டேய தீர்த்தம் சீரமைப்பு
நமக்கு நாமே திட்டத்தில் மார்கண்டேய தீர்த்தம் சீரமைப்பு
நமக்கு நாமே திட்டத்தில் மார்கண்டேய தீர்த்தம் சீரமைப்பு
ADDED : மார் 03, 2024 12:02 AM

திருப்புவனம்: திருப்புவனம் மார்கண்டேய தீர்த்த தெப்பக்குளம் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் பொது மக்கள் பங்களிப்புடன் சீரமைக்கப்பட்டு வருகிறது.
2020ம் ஆண்டு சீரமைத்து புதிய கட்டடம் கட்டப்பட்டு ஊரணியைச் சுற்றிலும் பேவர் பிளாக் கற்கள் பதிக்கப்பட்டு பொதுமக்கள் ஓய்வெடுக்க வசதியாக இருக்கை, சூரிய மின்சக்தி தானியங்கி விளக்குகள் உள்ளிட்டவை பொருத்தப்பட்டன.
தற்போது நமக்கு நாமே திட்டத்தின் கீழ் பொதுமக்கள் பங்களிப்பு ஐந்து லட்ச ரூபாயுடன் மாவட்ட நிர்வாகத்தின் ஐந்து லட்ச ரூபாயும் சேர்த்து பராமரிப்பு பணி நடந்து வருகின்றன. பேவர் பிளாக் கற்கள் பெயர்த்து எடுக்கப்பட்டு நடை பாதை சீரமைக்கப்படுகிறது. புதிதாக மின் விளக்குகளும் பொருத்தப்பட்டு வருகின்றன.
ஊரணியைச் சுற்றி உள்ள சிலைகள், சிற்பங்கள், சுற்றுச்சுவர் பழுது பார்க்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட உள்ளது.