ADDED : ஆக 09, 2025 03:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: தேர்தல் கமிஷனை கண்டித்து சிவகங்கையில் மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
சிறப்பு தீவிர திருத்தம் என்ற பெயரில் பீகாரில் 65 லட்சம் வாக்காளர்களை பட்டியலில் இருந்து நீக்கிய தேர்தல் கமிஷனை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் மோகன் தலைமை வகித்தார்.
மாநில செயற்குழு அர்ச்சுணன் சிறப்பு வகித்தார். மாவட்ட செயற்குழு கருப்புச்சாமி, மணியம்மா, வீரபாண்டி, முத்துராமலிங்க பூபதி, சுரேஷ் பேசினர். ஒன்றிய செயலாளர்கள் தென்னரசு, உலகநாதன், அழகர்சாமி, முனியராஜ், மாவட்ட குழு விஸ்வநாதன், சாந்தி, விஜயகுமார், கவுதம், வழக்கறிஞர் மதி பங்கேற்றனர்.