/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தபால் ஊழியர்கள் இன்று கருப்புபேட்ஜ் அணிந்து பணி
/
தபால் ஊழியர்கள் இன்று கருப்புபேட்ஜ் அணிந்து பணி
ADDED : ஆக 09, 2025 03:33 AM
சிவகங்கை: தபால் நிலையங்களில் அறிமுகம் செய்துள்ள புதிய 2.0 சாப்ட்வேர் பிரச்னைக்கு தீர்வு காண வலியுறுத்தி, ஊழியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணிபுரிய உள்ளதாக எழுத்தர் கிராமிய அஞ்சல் ஊழியர் சங்க கோட்ட செயலாளர் எஸ்.செல்வன் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: தபால் துறை சேவைகளை மேம்படுத்த புதிய (ஏ.பி.டி.,2.0 சாப்ட்வேர்) மென்பொருள் அறிமுகம் செய்துள்ளனர். இந்த சர்வர் ஆரம்பித்த ஆக., 4 முதல் நெட்வொர்க் பிரச்னையால் பணிகளை விரைந்து முடிக்க முடியவில்லை.
நள்ளிரவு வரை காத்திருந்து பணிபுரிய வேண்டிய நிலை உள்ளது. புதிய சாப்ட்வேர் நிறுவுவதால் ஏற்படும் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். சாப்ட்வேர் பிரச்னை யை விரைந்து சரி செய்யக்கோரி, இன்று (ஆக.,9) அனைத்து தபால் நிலையங்களிலும் அகில இந்திய அஞ்சல் ஊழியர்கள் சங்கம், கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்கம், எழுத்தர்கள் சங்கம் சார்பில் ஊழியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணிபுரிய உள்ளோம், என்றார். எழுத்தர் சங்க கோட்ட செயலாளர் மாதவன், தபால்காரர்கள் சங்க செயலாளர் நடராஜன் உடனிருந்தனர்.