/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
குடியிருப்பில் கொட்டப்படும் இறைச்சி கழிவு
/
குடியிருப்பில் கொட்டப்படும் இறைச்சி கழிவு
ADDED : ஜூலை 22, 2025 11:46 PM
திருப்புவனம்; திருப்புவனம் அருகே லாடனேந்தலில் குடியிருப்பில் இறைச்சி கழிவுகளை கொட்டுவதால் சுகாதாரக்கேடு நிலவுவதுடன் துர்நாற்றம் வீசுகிறது.
லாடனேந்தலில் ஆடு, கோழி இறைச்சி கடைகள் 10க்கும் மேற்பட்டவை செயல்பட்டு வருகின்றன. தினசரி இங்கு 100க்கும் மேற்பட்ட கோழிகள் இறைச்சிக்காக வெட்டப்படுகின்றன.
வெட்டிய பின் மீதமாகும் கழிவுகளை ஊருக்கு வெளியே குழிதோண்டி புதைக்க வேண்டும். நடைமுறையில் இறைச்சி கடை உரிமையாளர்கள் இதனை பின்பற்றுவதில்லை.
லாடனேந்தலில் கோழி இறைச்சி வெட்டிய பின் மீதமாகும் கழிவுகளை குடியிருப்பு பகுதிக்குள் தினசரி கொட்டுவதால் துர்நாற்றம் வீசி சுகாதார கேடு நிலவுகிறது.
லாடனேந்தல் சதீஷ் கூறுகையில்: வீட்டின் அருகே பயன்படுத்தப்படாத கிணற்றில் கடந்த ஒரு வருடமாக இறைச்சி கழிவுகளை கொட்டி வருகின்றனர். பலமுறை புகார் அளித்தும் எந்த வித நடவடிக்கையும் இல்லை. மழை காலங்களில் இறைச்சி கழிவு நீர் நிலத்தடியில் புகுந்து குடியிருப்பு பகுதி ஆழ்துளை கிணற்றையும் பாதித்து வருகிறது.
இறைச்சி கழிவுகளை ஊருக்கு வெளியே பள்ளம் தோண்டி புதைத்து அழிக்க வேண்டும் என்பது விதி ஆனால் இங்கு பயன்பாடில்லாத கிணற்றில் ஒரு வருடமாக கொட்டி வருகின்றனர்.
துர்நாற்றம் காரணமாக வீடுகளினுள் இருக்கவே முடியவில்லை. பல முறை புகார் அளித்தும் கிணற்றில் கொட்டுவதை நிறுத்தவே இல்லை, என்றார்.